Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 30, 2019

விஸ்வாசம் இதுவரை உலகம் முழுவதும் எவ்வளவு வசூல்! முழு விவரம்


தல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ஜகபதி பாபு, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு, அனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான விஸ்வாசம் படத்திற்க்கு படக்குழு எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததுள்ளது. வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

உலகம் முழுவதிலும் விஸ்வாசம் திரைப்படம் இதுவரை ரூ 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


இந்த வாரம் சர்வம் தாளமயம், வந்தா ராஜவாதான் வருவேன், பேரன்பு போன்ற படங்கள் ரிலீஸ் ஆனாலும் பல திரையரங்குகளில் விஸ்வாசம் படம் தொடர்ந்து திரையிடப்பட  போவதாக பல திரைப்படங்கள் அறிவித்துள்ளது. இதனால் வரும் வாரங்களில் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages