Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 30, 2019

பேட்ட முழு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன நிலையில் பேட்ட ஃபீவர் சற்றும் குறையவில்லை. வெளியான நாள் முதல் இன்றுவரை ரஜினி ரசிகர்கள் பேட்ட படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதிலும் இதுவரை ரூ 216.95 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் மட்டுமே பேட்ட ரூ 109 கோடியும் ஆந்திராவில் ரூ 8.60 கோடியும், கர்நாடகாவில் ரூ 18 கோடியும், கேரளாவில் ரூ 7.85 கோடியும் வசூல் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி ROI யில் 5 கோடியும், ஓவர்சிஸில் ரூ 68.50 கோடியும் சேர்த்து மொத்தமாக இதுவரை ரூ 216.95 கோடி வரை வசூல் செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages