Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

வாழ்வின் மதிப்பை உணர்த்திய புற்றுநோய் - மனிஷா கொய்ராலா உருக்கம்


உயிரே, இந்தியன், முதல்வன், பாபா போன்ற படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா. இவர் கடந்த சில ஆண்டுகளாக கர்ப்பப்பை புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவில் தீவிர சிகிச்சை மேற்கொண்ட பிறகு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஹீல்டு: புது வாழ்வு கொடுத்த கேன்சர் எனும் தலைப்பில் சுய சரிதை ஒன்றை எழுதியுள்ள மனிஷா கொய்ராலா. தான் புற்றுநோயால் அடைந்த துன்பத்தை பற்றியும், அதிலிருந்து மீண்டு வந்ததை பற்றியும் அப்புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

இதனிடையே ஜெய்ப்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மனிஷா கொய்ராலா, தன்னை பாதித்த புற்றுநோய் தனக்கு ஆசான் என்றும், அது வாழ்வின் மதிப்பை கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages