Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

தளபதி விஜய்யுடன் சிறுத்தை சிவா - மாஸ் அப்டேட் இதோ


விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் சென்னையில் தொடங்கியது. இப்படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற மிகப்பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி விஜய் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சர்கார் படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக அமைந்தது. அதே போல் தளபதி 63யும் விளையாட்டு சம்மந்தப்பட்ட கதைகளத்தை கொண்டு உருவாகவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.


ஃபேமிலி ஆடியன்ஸை கவர நினைக்கும் விஜய் ஒரு மாஸான கமர்ஷியல் படத்தை கொடுக்க நினைக்கிறாராம். சிறுத்தை சிவாவோ பி மற்றும் சி சென்டர்களுக்காக படம் செய்பவர். இதனால் விரைவில் இந்த கூட்டணி  இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாவும் விஜய்க்காக மூன்று கதை எழுதி வைத்திருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages