Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 22, 2019

பேட்ட, விஸ்வாசம் சென்னை பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்! யார் முதலிடம்


சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படத்தையும், தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்விரு படங்களும் வெளியாகி 10 நாட்களை கடந்தும் பிறகும் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி வசூலை பொறுத்தவரை இரு படங்களில் யார் முதலிடம் பிடிப்பது என்ற கடுமையான போட்டியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பேட்ட திரைப்படம் 12 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 11.8 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அதேபோல் பேட்ட படத்திற்க்கு போட்டியாக வந்த அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இரண்டு வாரத்திற்குள் இவ்விரு படங்களுக்கும் இணைந்து சென்னையில் மட்டும் ரூ 21.8 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages