Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 16, 2019

உலகளவில் தனுஷ் பாடலுக்கு கிடைத்த அங்கீகாரம்!


தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வடசென்னை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்தை தொடர்ந்து வெளியான மாரி 2 கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருந்தபோதிலும் வசூலில் பெரிதாய் பாதிப்பு இல்லை என கூறப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கிடைத்தது. யூடியூப்பிலும் 78 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

இந்நிலையில் இந்தப்பாடலுக்கு மற்றுமொரு அங்கீகாரமாய்  (billbord.com)  என்ற வெளிநாட்டு தளம் ஒன்றில் ரவுடி பேபி பாடலுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

ஏற்கனவே தனுஷின் கொலவெறி பாடல் உலகம் முழுவதிலும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages