Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 26, 2019

விஸ்வாசம் வெற்றிக்கான சீக்ரெட் இதுதான் - பிரபல இயக்குனர் கருத்து


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே நேரத்தில் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான கரு.பழனியப்பன் விஸ்வாசம் படத்தின் வெற்றிகான சீக்ரெட்டை கூறியுள்ளார்.


மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கரு.பழனியப்பன் "தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக இளைஞர்களுக்காக படம் எடுத்து வந்த நிலையில், தற்போது சூழல் மாறியுள்ளது. குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு மக்கள் வருவதை கண்டு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்கு உதாரணம் சமீபத்தில் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம்" குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெருகிறது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages