சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். சிம்ரன் மற்றும் த்ரிஷா கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான பேட்ட படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஸ்டைல் விருந்தாக அமைந்தது. பல வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டாரின் பழைய ஸ்டைலை கார்த்திக் சுப்புராஜ் கண் முன் கொண்டு வந்திருந்தார் என இயக்குனரை பலரும் பாராட்டினர்.
இந்தியாவே போலவே உலகம் முழுவதிலும் பேட்ட படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பேட்ட வெளிநாடுகளில் மட்டுமே 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக இண்டர்நேஷனல் விநியோகஸ்தர் மாலிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோ உங்களுக்காக இதோ
International BO report from International distributor of #Petta @Malikstreams stating #Petta has collected 65 crores till date Worldwide except India.#PettaWorldWideBB pic.twitter.com/lyDHzvDaVy— Sun Pictures (@sunpictures) January 17, 2019
No comments:
Post a Comment