Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 18, 2019

வசூலில் பேட்டயை முந்திய விஸ்வாசம்!


தல அஜித் மற்றும் நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படமும், சூப்பர் ஸ்டார் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள பேட்ட படமும் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் திரைக்கு வந்திருந்தது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படம் என்பதால் இவ்விரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதிலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை பேட்ட படத்தை காட்டிலும் விஸ்வாசம் படத்திற்கு B மற்றும் C சென்டர் ஆடியன்ஸை மத்தியில் கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது. இது படங்களின் வசூலிலும் பிரதிபலித்துள்ளது. 

அதன்படி பேட்ட படம் 100 கோடி வசூல் செய்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் பேட்ட படத்திற்க்கு போட்டியாக வந்த விஸ்வாசம் திரைப்படம் 125 கோடி வசூல் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை விஸ்வாசம் படத்தை வாங்கிய KJR ஸ்டுடியோஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages