Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 21, 2019

பிரபல தியேட்டர் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்


விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சர்கார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு புறம் இருந்தாலும் விஜய் ரசிகர்கள் பலரும் கொண்டாடும் படமாக அமைந்தது.

சமீபத்தில் சர்கார் 75வது நாளை கொண்டாடிய விஜய் ரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்றான வெற்றி தியேட்டர் சர்கார் 100வது நாளை வெகு விமர்சையாக கொண்டாட இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கௌதமன் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதனால் தளபதி ரசிகர்கள் அனைவரும் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages