Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 26, 2019

தளபதி 63க்கு முன்னரே விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து!


விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் சென்னையில் தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக சூட்டிங் நடைப்பெற்று இப்படத்தை எதிர்பார்த்து தளபதி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள சர்வம் தாளமயம் திரைப்படம் பிப்ரவரி 1 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் விஜயின் தீவிர ரசிகராக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே, படத்தில் ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரி ஒருவர் நானே பெரிய விஜய் ரசிகண்டா என்று கூறி தன் நெஞ்சில் விஜயின் புகைப்படத்தை பச்சை குத்தியிருப்பதை காட்டுவது போன்ற காட்சிகள் படத்தில் வருகிறதாம். 

அதுமட்டுமல்லாமல் படத்தில் பல இடங்களில் தளபதியின் பெருமை சொல்லும் காட்சிகள் இருக்குமாம். இதனால்  தளபதி 63க்கு முன்னரே விஜய் ரசிகர்களுக்கு சர்வம் தாளமயம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என நம்பலாம்.


நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் மட்டுமல்லாது நிஜத்தில் விஜயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages