Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2019

தலைவர் 166ல் நடிக்கவுள்ள பிரபல காமெடி நடிகர்!


பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் முழு திரைக்கதையையும் ஏ.ஆர்.முருகதாஸ் தயார் செய்து விட்டார் எனவும், விரைவில் ஷீட்டிங் தொடங்க இருப்பதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாயின.

இதற்கிடையில் சௌந்தர்யாவின் திருமண வேலைகளில் ரஜினிகாந்த் பிஸியாக இருக்கிறார். இந்த திருமணம் நிறைவு பெற்றவுடன் தலைவர் 166 யின் ஷீட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தலைவர் 166 யில் காமெடி நடிகர் யோகி பாபு முதன் முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக வெளியான சர்கார் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages