Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2019

தளபதி 63யில் ஓப்பனிங் பாடல் இவர் பாடுகிறாரா? கசிந்த தகவல்


சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படம் தளபதி 63 என அழைக்கப்படுகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. மெர்சல், சர்கார் ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் விஜய் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

தற்போது சென்னை பின்னி மில்லில் விறுவிறுப்பாக ஷீட்டிங் நடைப்பெற்று வரும் இந்தப்படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அது என்னவென்றால் சர்கார் படத்தில் சிம்டாங்காரன் பாடலை பாடிய பம்பா பாக்யா தளபதி 63யில் ஓப்பனிங் சாங் பாட இருக்கிறாராம். ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages