Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2019

எனக்கு திருமணம் ஆனது பலருக்கு தெரியாது! நான் வேண்டுமென்றே அதை மறைக்கவில்லை - ராதிகா ஆப்தே

 

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவுக்கும், லண்டன் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லருக்கும் 2012 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ராதிகா மும்பையில், பெனடிக்ட் லண்டனின் வசித்து வருகிறார்கள். இவர்களின் மணவாழ்க்கை குறித்து சுவாரஸ்யமான தகவல்களை ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் நானும், அவரும் பக்கத்தில் இருந்தாலும் சரி, தூரத்தில் இருந்தாலும் சரி எங்களுக்குள் சண்டைகள், கருத்துவேறுபாடுகள் வரத்தான் செய்யும். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்துள்ளோம். சண்டை போட்டாலும் சிறிது நேரம் கழித்து பேசிவிடுவோம்.

யார் மீது தவறு இருந்தாலும் உடனுக்குடன் மன்னிப்பு கேட்டுவிட்டுவோம். நானும், பெனடிக்டும் 8 வருடங்களுக்கு முன் சந்தித்து திருமணம் செய்துக்கொண்டோம். ஆனால் எனக்கு திருமணம் ஆனது பலருக்கு தெரியாது. நான் அதே வேண்டுமென்றே மறைக்கவில்லை. திருமணம் செய்துக் கொள்கிறோமோ, இல்லையோ உண்மையாக இருப்பது தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages