ஃபோர்ப்ஸ் இந்தியா 30 வயதுக்குள் சாதித்த பிரபலங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் "அர்ஜுன் ரெட்டி" சென்சேஷன் விஜய் தேவரகொண்டாவும் இடம்பிடித்திருந்தார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் "என்னுடைய 25 வயதில் ஆந்திரா வங்கியில் குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ 500 இல்லனா அக்கவுண்ட் கிளோஸ் ஆயிடும். 30 வயதுக்குள்ள செட்டில் ஆயிடு அப்பதான் பின்னாடி சந்தோஷமா இருக்கும்னு அப்பா சொன்னார். 4 வருஷம் கழிச்சி ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் நான்" என நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்
இவரின் இந்த பதிவை பலரும் பாராட்டினர். இந்நிலையில் தனி ஒருவன் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா விஜயை வாழ்த்தியதோடு, எனக்கு இந்த டிவிட்டில் இருந்து சூப்பர் திரைக்கதை கிடைச்சிருக்கு. பின்னாடி காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா நான் தான் முதல் சாய்ஸா இருக்கனும். அப்படி இருந்த காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன். நன்றி அண்ணா என டிவிட்டியுள்ளார்.
You should Give me first right of choice :) I won't sue - big thanksna 🤗— Vijay Deverakonda (@TheDeverakonda) February 6, 2019
No comments:
Post a Comment