Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2019

மீண்டும் சர்ச்சை பட இயக்குனர் படத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார்.


தொடர்ந்து இரண்டு அடல்ட் காமெடி படங்களை கொடுத்த சந்தோஷ் பி ஜெயக்குமார். ஆர்யாவின் நடிப்பில் கஜினிகாந்த் படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பை கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் கார்த்தியுடன் இணைய இருக்கிறார். தீமைதான் வெல்லும் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை ஸ்டுடியோ கீரின் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை கோவாவில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages