நடிகர் பார்த்திபன் மற்றும் சீதாவின் மூத்த மகள் அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் தான் இவர்களின் இளைய மகள் கீர்த்தனாவின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கு, நரேஷ் கார்த்திக் என்பவருடன் கடந்த மாதம் சோழா ஓட்டலில் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நரேஷ் கார்த்திக் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளு பேரனாம்.
No comments:
Post a Comment