Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2019

சந்தேகமே வேண்டாம்! விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி படம்...இவங்களே சொல்லிட்டாங்க

தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. ஜகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, அனிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்தார்.



தந்தை மகள் பாசத்தை கதைக்களமாகக் கொண்டு உருவான விஸ்வாசம் படம் பலரின் பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளனர். அதில் விஸ்வாசம் திரைப்படம் தடுத்து நிறுத்த முடியாத வெற்றியை பதிவு செய்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் பெற்றுத்தந்துள்ளது.


இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் சந்தேகத்தை தீர்க்க எங்கள் அலுவலகத்தின் கதவுகள் திறந்திருக்கிறது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் இந்த படம் லாபத்தை கொடுத்துள்ளது. சந்தேகமே வேண்டாம் விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி படம். இது எங்களுடையது மட்டுமல்ல. உங்களுடையதும் தான் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages