Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2019

தளபதி 63ல் நான் நடிக்கவில்லை! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்



விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக தயாராகி வரும் படம் தளபதி 63. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தளபதி 63 படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்த ராஜ்குமார் இந்த படத்தில் நடிக்கிறார் என்று அண்மையில் தகவல் பரவின.

இதற்கு ஆதரமாக ராஜ்குமார், யோகிபாபுவுடன் கால்பந்து விளையாடும்  உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் கசிந்தது. இதற்கு பதிலளித்துள்ள ராஜ்குமார் தான் தளபதி 63யில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த புகைப்படம் கதிருடன் நான் நடிக்கும் ஜடா படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

கதிர் நடிக்கும் ஜடா படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages