பிக்பாஸ் நிகழ்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஓவியா. இந்த நிகழ்ச்சி முன் ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் அவை யாவும் கொடுக்காத புகழையும், ரசிகர்களின் அன்பையும் பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்துவிட்டது எனலாம்.
பிக்பாஸ் நிகழ்சியில் ஓவியா ஆரவ்வை காதலித்தார். ஆனால் ஆரவ் அவர் காதலை மறுத்துவிட்டார். இந்நிகழ்ச்சி நிறைவுபெற்ற உடன் ஆரவ்வும், ஓவியாவும் வெளிநாடுகளில் சுற்றி திரிவது போல சில புகைப்படங்கள் கசிந்தது. ஓவியாவும், ஆரவ்வும் லிவ்விங் டூ கெதரில் இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கு ஓவியா இப்போது பதிலளித்துள்ளார். "அவரும் நானும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக அவர் இருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம்" நாங்கள் லிங்விங் டூ கெதரில் இல்லை. சிலர் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment