Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2019

மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்கும் யூடியூப் பிரபலம்! இவரா அது



சிவகார்த்திகேயன்- நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆனது. இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தை பற்றிய ஒரு ருசிகர தகவல் கசிந்துள்ளது.

அது என்னவென்றால் எருமசாணி யூடியூப் பிரபலம் ஹரிஜாவை  பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். அவர் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை சப்ரைஸாக வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages