Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2019

பேட்ட, விஸ்வாசம் சென்னை வசூலில் யார் டாப்! விவரம் இதோ


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பேட்ட படமும், தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

படம் வெளியாகி 25 நாட்கள் கடந்த பிறகும் பல திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை நம்மால் காண முடிகிறது. அதுவும் நேற்று 25வது நாள் என்பதால் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளில் சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிலையில் சென்னையில் மட்டுமே பேட்ட திரைப்படம் 25 நாட்களில் ரூ 14.92 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. பேட்ட படத்திற்க்கு போட்டியாக வந்த விஸ்வாசம் திரைப்படம் ரூ 12.41 கோடி வரை வசூல் செய்துள்ளது.

சென்னை வசூலில் ஆரம்பத்தில் இருந்தே பேட்ட திரைப்படம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages