Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2019

சந்தானம் முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சந்தானம் , ஸ்ரீரிதா சிவதாஸ், நான் கடவுள் ராஜேந்திரன், தீப்தி ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் வெளியான படம் "தில்லுக்கு துட்டு" 2. இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  படம் பார்த்த ரசிகர்கள் சந்தானம் இஸ் பேக் என கூறிவருகின்றனர்.


இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராம்பாலா தானும் சந்தானமும் லொள்ளு சபாவில் பணியாற்றும் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் சந்தானம் தன் ஆரம்ப காலத்தில் வாங்கிய சம்பளம் ரூ 50 ரூபாய் மட்டுமே என்று கூறியுள்ளார்.

மேலும் தான் லொள்ளு சபாவில் இருந்து வெளியே வரும்போது அவரின் சம்பளம் 1200 ரூபாயாக தான் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் காமெடியில் கலக்கிய சந்தானத்தின் பயணம் வெறும் 50 ரூபாயில் ஆரம்பித்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages