சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தனுஷ் உடல் ஆரோக்கியத்தை குறித்து பேசியுள்ளார்.
மேடையில் பேசிய தனுஷ் இதயத்திற்கு வெளியே இருக்கும் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு தான் நெஞ்சுவலி என்பதை தெளிவாக கூறினார்கள். நெஞ்சுவலி வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். சரியான உணவு, சரியான தூக்கம், உடற்பயிற்சி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்றார்.
உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமானது, முன்பெல்லாம் நமது அன்றாட வாழ்வியலோடு கலந்திருந்த உடற்பயிற்சிகளை மறந்து மெஷின் வாங்கி வைத்து பயிற்சி எடுக்கிறோம். இதனால் சோம்பேறியாகிவிடுகிறோம். நோய் தொற்றிக் கொள்கிறது.
"உடம்பு தான் கோயில் மனசு தான் தெய்வம்" என்று கூறிய தனுஷ் அனைவரும் தன் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment