Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

"SK 13" இசை உரிமைத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!


சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் படம் எஸ். கே 13 இப்படத்தை சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.  ராதிகா சரத்குமார், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

தற்போது விறுவிறுப்பாக ஷீட்டிங் நடைபெற்று வரும் இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

எஸ். கே 13 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages