தமிழ் சினிமாவுக்கு தற்போது பெரிய தலைவலியாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் தான் ஒரே நாளில் ஒழித்துக்கட்ட முடியும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக "இளையராஜா 75" என்ற நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் அண்மையில் நடத்தி முடித்துள்ளது. இந்த விழாவை வெற்றிவிழாக மாற்றிய அனைவரும் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த விழாவுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் விஷால் மற்றும் அவரது குழுவினர் நேரில் சந்தித்து நன்றி கூறியுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். தமிழக அரசை தான் கடவுள் போல் நம்பியிருக்கிறோம். அவர்கள் மனது வைத்தால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒரே நாளில் ஒழித்துக்கட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment