விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
ராம், ஜானு என்ற இருவரின் காதலை அழுத்தமாக கூறியிருந்தால் இப்படம் பலரையும் வெகுவாக கவர்ந்தது. அண்மையில் இப்படத்தின் 100 நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் விஜய் சேதுபதி, த்ரிஷா, நடிகர் பார்த்திபன், இயக்குனர் பிரேம் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய பார்த்திபன் பல நடிகைகளை தன் படங்களில் நடிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைத்தேன்.
அதில் தப்பித்துக் கொண்டது த்ரிஷாவும், நயன்தாராவும் தான் என்று தன் பாணியில் கிண்டலாக கூறினார். மேலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவை மேடைக்கு அழைத்து அவர்களை கட்டிபிடிக்க சொன்னார். பின்னர் இதுதான் 96 படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் என்றார்.
No comments:
Post a Comment