Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 10, 2019

விரைவில் வெளியாகவுள்ள ஸ்ரீ ரெட்டியின் படம்! திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ், தெலுங்கு திரையுலகை சார்ந்த பல முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரப்பரப்பை கிளப்பியவர் ஸ்ரீ ரெட்டி. அது மட்டுமின்றி தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிடுவேன் எனவும் கூறியிருந்தார்.


இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி வாழ்வில் நடந்த பரப்பரப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படம் ஒன்று உருவாகியுள்ளது.

"ரெட்டி டைரி" என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை டாக்டர் அலாவுதீன் இயக்கி வருகிறார். திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாம். இதனால் திரைத்துறையை சேர்ந்த பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages