சினிமா, அரசியலை கடந்து மக்கள் மனத்தில் இன்றும் நிலைத்திருபவர் கேப்டன் விஜய்காந்த். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த விஜயகாந்த் உடல்நலக் குறைவின் காரணமாக தற்போது அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது 29வது திருமண நாளை விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதாவுடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அப்போது வைரல் ஆனது.
இவர்களின் திருமணநாளுக்கு வாழ்த்து சொல்லும் வகையில் மகன் விஜய் பிரபாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்காந்த் மற்றும் பிரமேலதா விஜயகாந்தின் திருமணம் வீடியோவை பதிவிட்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Happy anniversary mom and dad 🥰😘 @iVijayakant pic.twitter.com/GW3CQM10Lp— Vijay Prabhakaran (@vj_1312) January 31, 2019
No comments:
Post a Comment